மறுவயற்பயிர்ச்செய்கையின்கீழ் தங்கவேலாயுதபுரத்தில் உழுந்து அறுவடை

கிழக்கு மாகாண விவசாயத் திணைக்கத்தின் தங்கவேலாயுதபுரம் விவசாய நிலையத்திற்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு   தங்கவேலாயுதபுரம் கிராமங்களில் மறுவயற்பயிர்ச்செய்கையின்கீழ் உழுந்து பயிர்ச் செய்கை சிறப்பான முறையில் செய்கை பண்ணப்பட்டுள்ளது.
 
இதற்கான விதையினை கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களமானது மானிய விலையில் வழங்கியிருந்தது.
இவ்வாறு செய்கை பண்ணப்பட்ட உழுந்து அறுவடை வயல் விழா விவசாயப் போதனாசிரியர் எஸ்.சித்திரன் தலைமையில் நடைபெற்றது.
 
இதன் போது, லகுகல வலயத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர்  எஸ். பரமேஸ்வரன் , பாட விதான உத்தியோகத்தர் என்.எம்.ஆர் றஹீல் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 
இங்கு கருத்து தெரிவித்த விவசாயப் போதனாசிரியர் எஸ்.சித்திரன் கொரோனா காலத்தில் உணவு உற்பத்தியினை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு மறுவயற் பயிர் விதைகள் வழங்கப்பட்டு வெற்றிகரமாக பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
 
மேலும் இங்கு கருத்து தெரிவித்த உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டலின்கீழ் விவசாயிகளுக்கு மறுவயற் பயிர்ச்செய்கையின் மூலம் அதிக இலாபத்தினை பெறக்கூடியதாக உள்ளதாக தெரிவித்தார்.

Related posts