முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

  •  ஷாணு பவுண்டேசன் ஊடாக முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்புவடக்கில் இயங்கிவரும் ஷாணு பவுண்டேசன் ஊடாக முன்பள்ளி மாணவர்களுக்காகமுன்னெடுக்கப்பட்டுவரும் ஆயிரம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கைகள்கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ரியோ மணிரான்ஸ்பர் நிறுவனத்தின் அனுசரணையுடன் நாட்டின் பல பாகங்களிலும் உள்ளஆயிரம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் வறிய 100 மாணவர்களுக்கானதுவிச்சரக்க வண்டிகள் வழங்கம் நடவடிக்கைகளை ஷாணு பவுண்டேசன் முன்னெடுத்துவருகின்றது.இதன் கீழ் மட்;டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளிகளுக்கான கற்றல்உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு,புன்னைச்சோலை மெதடிஸ்த முன்பள்ளி மற்றும் கோட்டைமுனை மெதடிஸ்தமுன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.ஷாணு பவுண்டேசனின் பணிப்பாளர் என்.தர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தன்னாமுனைமெதடிஸ்த திருச்சபையின் போதகர் வசந்த செல்வம்,சின்ன ஊறணி மெதடிஸ்த திருச்சபையின்போதகர் கே.ஜெகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.இன்றைய தினம் சுமார் 100 மாணவர்களுக்கான புத்தக பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள்வழங்கிவைக்கப்பட்டன.முன்பள்ளி கல்வியை ஊக்கப்படுத்துவதன் ஊடாக சிறந்த மாணவர்களை சமூகத்தில்ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஷாணு பவுண்டேசனின்பணிப்பாளர் என்.தர்சன் தெரிவித்தார். 

Related posts