றாணமடுஇபூச்சிக்கூட பிரதேசத்தில் மணல் அகழ்வில் எவ்விதமான அரசியல் தலையீடுகள் இல்லை

றாணமடுஇபூச்சிக்கூடு பிரதேசத்தில் அனுமதியைப் பெற்று மணல் அகழ்வு இடம்பெறுவதில் எவ்விதமான அரசியல் மற்றும் தனிப்பட்ட தலையீடுகள் இன்றி நடைபெற்றுவருவதாக போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி இன்று தெரிவித்துள்ளார்

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூங்கிலாறு பிரதேசத்தில் கனகரக வாகனங்களைக் கொண்டு மணல் ஏற்றி விற்பளை செய்து வருவதாகவும் இதனால் இப்பிரதேசத்தின் வளங்கள் நாளுக்குநாள் அழிவடைந்து வருதாகவும் இதனை கண்டித்து அப்பிரதேச வாசிகள்  அண்மையில்;; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இப்பிரதேசத்தில் மணல் அகழ்விற்காக ஏழு தனிநபர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்தது  இந்த அனுமதிப்பத்திரமானது நீர்பாசணத்திணைக்களம் மற்றும் புவிச்சதிரவியல் சுரங்கப்பணியகம் ஆகிய திணைக்களங்களின் தொழிஙட்ப பரிசோதனை அறிக்கையின் பின்னரே இவர்களுக்கான அனுமதி வழங்கப்படுவது வழக்கமாகும். இந்த அனுமதியில் ஏதும் பிரதேச மக்களால் புகார்கள் தெரிவிற்கப்பட்டால் இதனை மீள்பரிசீலனை செய்வது எமது கடமையாகும் எனத்தெரிவித்தார்.

இப்பிரச்சனைக்கு யாரையும் பாதிக்காத வகையில் தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களின் வேண்டுதலுக்கு அமைவாக மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் அம்பாறை மாவட்ட நீர்பாசணத்திணைக்கள பொறியியலாளர்இ புவிச்சத்திரவியல் சுரங்கப்பணியகத்தின் 

பொறியியலாளர்பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி மற்றும் உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் கமநல அமைப்புக்கள்,வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டயஸ் போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ்.ரஜனி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் மத்தியில் இப்பிரதேசத்தில் மணல் அகழ்வினால் பாதிப்புக்கள் ஏற்படுகின்றதா அல்லது பாதிப்புக்கள் இல்லையா என்பது பற்றி ஆராயப்பட்டதாகவும். இந்த கனகர வாகனங்கள் செல்லும் பாதைகள் பாதிக்கப்படாத வகையில் போரதீவுப்பற்று பிரதேச சபை கண்காணிப்பில் ஈடுபடுவதற்கும் மணல் அகழ்வில் ஈடுபடும் அனுமதிபத்திர நபர்கள் பிரதேச சபைக்கு கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கபட்டிருந்தது.

அடுத்து இப்பரதேசத்தில் மணல் அகழ்வினால் சுற்றுச் சூழல் வயல் காணிகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்றதான என்பதனை ஆராய்ந்து அதற்கான தொழிஙட்ப அறிக்கை ஒன்றினை விரைவில் சமர்ப்பிப்பதற்கு அம்பாறை மாவட்ட நீர்பாசணத்திணைக்களத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாகவும்.அதன் பின்னர் இப்பிரதேசங்களில் மணல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதா இல்லை என்பது பற்றி விரைவில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Related posts