மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெயர்பெற்ற விளையாட்டுக்கழகங்களில் ஒன்றான சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் இன்று 06 ஆம் திகதி மட்/சிவானந்தா தேசிய பாடசாலையில் விபுலானந்தர் கேட்போர் கூடத்தில் கழகத்தின் தலைவர் சாட்டோ ஈ. இராஜரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றுகூடல் நிகழ்வானது மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமாகி உயிர்நீர்த்த கழக உறுப்பினர்களுக்காக ஒரு நிமிட மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டுக்கான கூட்டறிக்கையினை கழகத்தின் செயலாளர் எம். நிவாசனினால் சமர்ப்பிக்கப்பட்டது அத்துடன் 2018 ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கையினை எஸ்.ஶ்ரீலக்சனினால் வாசிக்கப்பட்டதுடன் 2018 ஆம் ஆண்டில் சிறந்த விளையாட்டுவீரர் சிறந்த ஆட்ட நாயகன் சிறந்த நிர்வாக உறுப்பினர் என பலருக்கன சிறப்பு விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டது. 
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கே சிலம்பு சுற்றுதல் மல்யுத்தம் சீன விளையாட்டுக்கள் என பல போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த ஆர். கணபதிப்பிள்ளை ஐயா அவர்க்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts