வக்கியல்லயில் வித்தியாசமான முறையில் சுவாமி விபுலானந்தா சமூக மேம்பாட்டு அமைப்பு அங்;குரார்ப்பணம்.

வக்கியல்லயில் வித்தியாசமான முறையில் சுவாமி விபுலானந்தா சமூக மேம்பாட்டு அமைப்பு அங்;குரார்ப்பணம்.

மக்கள் வங்கி முகாமையாளராக இருந்த ஓய்வு பெற்ற மறுதினமே வியாழன் (03) க.யோகநாதன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கான சுவாமி விபுலானந்தர் சமூக மேம்பாட்டு மையத்தை பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள வக்கியல்ல மண்டூர் 35 கண்ணன் வித்தியாலயத்தில் அதிபர் பா.சுந்தரராஜன் தலைமையில் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி வழங்கி, மரக்கன்றுகளை பாடசாலையில் நட்டு மிகவும் எளிமையான முறையில் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்..

அங்கு குழுமியிருந்த 31 தரம் 5க்கு உட்பட்ட மாணவர்கள் மத்தியிலேயே சுவாமி விபுலானந்தா சமூக மேம்பாட்டு அமைப்ப பற்றிய பிரகடனத்தை வெளியிட்டார். அதன் நோக்கம் பற்றி அவர்களுக்கு தெளிவுபடுத்தினார். இந்த பாடசாலையின் மாணவர்களின் கல்வி விருத்திக்கு அந்த அமைப்பு தொடர்ந்து ஒத்தழைப்பை நல்கும் எனவும் தெரிவித்தார்.

தான் சிவானந்தியன் என்பதால் அங்கு கல்வி கற்கும் காலங்களில் சுவாமி விபுலாதனந்தர் பற்றி அதிகளவு தெரிந்து கொண்டதால் தனது ஓய்வு காலத்தில் அவரின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் செயற்படவேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடே இந்த அமைப்பாகும்.;

தனது பிறந்தநாளை அவர்களுடன் சிற்றுண்டி பரிமாறி மகிழ்ந்தார். அவர்கள் ஒவ்வொருவருடனும் தனித் தனியாக உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். அவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி மகிழ்வித்தார். ஒளவ்வைக்கு பிடித்தமான நெல்லி மரக்கன்றுகளை அவர்களுடன் சேர்ந்து நட்டு அவர்களுக்கு அதில் பிடிப்பை ஏற்படுத்தினார்.

அத்துடன் இம்முறை 5ந்தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் 70 புள்ளிகளுக்கு மேல் பெறும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் (வெட்டப்புள்ளியை கருதாமல்) புதிய துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைப்பதாக அவர்களிடம் உத்தரவாதம் அளித்தாh.;

இந்த அமைப்பு நகரப்புறங்களைத் தவிர்த்து பின்தங்கிய கிராமப் புறங்களுக்கே முக்கியத்துவம் அளித்து செயற்படும் என்ற அமைப்பின் கோட்பாட்டையும் தெரிவித்ததுடன் பின் தங்கிய நிலையில் இருக்கும் தமிழ் சமூகத்தின் சுய நிதியீட்டத்திற்கான வழிமுறைகளை கண்டறிந்து அவற்றை அறிமுகப்படுத்தி வழிகாட்ட இருப்பதாகவும் தெரிவித்தார்.; அத்துடன் இனப்பரம்பலை ஊக்குவிப்பதற்கான விழிப்பூட்டல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்கள் வங்கி முகாமையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற மறுதினமே தனது இலட்சிய இலக்கில் இறங்கி அதற்கான அமைப்பை ஏற்படுத்தி அதன் செயற்பாட்டை உடன் ஆரம்பித்து வைத்தமையானது ஒரு முன்மாதிரியான நிகழ்வாகும்.

சுவாமி விபுலானந்தர் சமூகத்தை நேசித்த பாணியில் தனது அமைப்பை எளிமையான முறையில், பின்தங்கிய கிராமத்தை தெரிவு செய்து, அங்கு தனது அமைப்பை ஸ்தாபித்து உடன் செயற்பாட்டையும் அடையாளப்படுத்தியமையானது சமூக நோக்குடன் கூடிய ஒரு புதிய முயற்சி என்பதில் ஐயமில்லை.

Related posts