வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் 9 ஏ தரச்சித்திகள்.

மட்டக்களப்பு – கல்குடா வலயத்தின் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மூன்று மாணவர்கள் 9 ஏதர சித்திகளைப் பெற்றுள்ளதுடன், மேலும் மூவர் 8 ஏ தரச் சித்தியுடன் ஒரு பீ சித்தியினையும் பெற்றுள்ளதாக அதிபர் எஸ்.மோகன் தெரிவித்தார்.
அத்துடன், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 65 வீதமானவர்கள் உயர்தரம் கற்கத்தகுதி பெற்றுள்ளனர்.  76 மாணவர்கள் கணிதப்பாடச் சித்தியுடன் உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதுடன், 13 மாணவர்கள் கணிதச் சித்தியின்றி சித்தியடைந்துள்ளனர்.
இச் சித்திகள் கடந்த வருடங்களை விடவும் அதிகமானது என்பதுடன் சிறப்பான பெறுபேறு என்றும் அதிபர் எஸ்.மோகன் தெரிவித்தார்.
பாடசாலையின் இந்தச் சிறப்பான கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைத்த ஆசிரியர்கள், பெற்றார், மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள அவர், மென்மேலும் அடைவு மட்டம் உயர்வடைவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். 
2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு; வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்திலிருந்து 117 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

Related posts