ஹிஸ்புல்லாவின் சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகத்தை குறி வைக்கும் ரணில்! திட்டம் ஆரம்பம்

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் சுவீகரித்துக் கொள்ள இடம் உள்ளதா என பரீட்சித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்ட மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல லிவேராவுக்கு எழுத்து மூலம் இந்த அறிவிப்பை விடுக்குமாறு பிரதமரினால், பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளன.

குறித்த பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இனங்களுக்கும், சமயங்களுக்கும் இடையில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் சிறு அறிவிப்புக்களை வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து இது போன்று வெளியிட்டு வருவதாயின், பல்கலைக்கழக சட்டத்தின் 70 (எப்) சரத்தின்படி, அந்த உரிமையாளரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்கலைக்கழகத்தை அரசுக்குச் சுவீகரித்துக் கொள்ள முடியுமா? என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாரே பிரதமர் கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை அண்மையில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, “இலங்கையில் மட்டுமே முஸ்லிம்கள் சிறுபான்மையினத்தவர்” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பித்தக்கது.

Related posts