5000ஆண்டுகளுக்கு முன் இந்துக்களால் தோற்றுவிக்கப்பட்டது யோகா கலை!

 
இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இந்துக்களால் தோற்றுவிக்கப்பட்ட யோகாகலை இன்று சர்வதேசரீதியில் இனமதபேதமின்றி கடைப்பிடிக்கப்படுகின்றதென்றால் அது அதன் மகத்துவமே காரணம். 
 
இவ்வாறு அறநெறி மாணவர்களுக்கான யோகாகலையை அறிமுகப்படுத்தும் தேசியநிகழ்வில் பிரதமஅதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் குறிப்பிட்டார்.
 
இந்நிகழ்வு காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டரங்கில் மட்டு.காயத்ரீபீடத் தலைவர் சிவயோகச் செல்வர் சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார் முன்னிலையில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 
திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜனும் அதிதியாகக்கலந்துகொண்டார்.
 
பிரதம அதிதியாக   அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் கெளரவ அதிதியாகவும் கலந்து கலந்துகொள்கிறார். காரைதீவு மைதானத்தில் 1000 அறநெறிமாணவர்கள் ஒன்றுகூடி இவ்யோகா பயிற்சியீடுபட்டனர். யோககலை நிபுணர் கே.சந்திரலிங்கம் பயிற்சியை நெறிப்படுத்தினார்.
 
அங்கு மேலதிகஅரச அதிபர் விமலநாதன் மேலும் உரையாற்றுகையில்:
 
அமைச்சர் சுவாமிநாதன் செயலாளர் எந்திரி சுரேஸ் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் ஆகியோர் இந்து கலாசார அமைச்சைப்பொறுப்பெடுத்ததன்பின்பு இலங்கையில் இந்துசமயத்தில் மறுமலர்ச்சி எழுச்சி இடம்பெற்றுவருகின்றது.
 
குறிப்பாக இந்தயோகாகலை ஜ.நாவினால் 2015இனால் சர்வதேசதினமாக அங்கீகரித்தபோதிலும் இந்தவருடம்தான் இவர்களின் அயராத முயற்சியினால் இங்கு அங்குரார்ப்பண தேசியநிகழ்வினூடாக ஆரம்பித்திருக்கின்றது.
 
யோகாவானது மனம் அலைபாய்வதை தடுத்து நிலைத்துநிற்பதற்கு வழிகோலுகின்றது. மேலும் உடல்உள ஆரோக்கிய வளர்ச்சிக்கும் வித்திடுகின்றது. பலதொற்றாநோய்களைத் தடுக்கும் வல்லமை உள்ளது. என்றார்.
 
பணிப்பாளர் உமாமகேஸ்வரன் உரை!
இந்தசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரன் உiராயற்றுகையில்:
 
2015இல் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜ.நாடுகள் ஸ்தாபனம் சர்வதேச தினமொன்றை யோகா கலைக்கு அங்கீகாரம்வழங்கியது.
இது உடல்உள ஆரோக்கியவளர்ச்சிக்கு அப்பால் ஆன்மீகத்தையும் வளர்க்கிறது.
 
இந்திய பாராம்பரிய பண்பாட்டுக்கலையான  கலையான யோகாவை உலகம் பூராக இன்று சகலஇனமக்களும் கடைப்பிடிக்கின்றார்கள். இலங்கைத்தாய்நாட்டில் எமது இந்து அறநெறி மாணவர்களின் எதிர்கால வாழ்வியலைக்களமாகக்கொண்டு இந்த சூரியநமஸ்காரத்தையும் யோகா கலையையும் அறிமுகப்படுத்துகின்றோம். என்றார்.
 
அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகா (சூரிய நமஸ்காரம்) பயிற்சியினை செயற்படுத்தும் திட்ட த்தை ஆரம்பித்துவைக்கும் வைபவங்கள் ஏனைய சில மாவட்டங்களிலும் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
அ.உமாமகேஸ்வரன் மேலும் கூறுகையில்: 
இலங்கைத்தீவில் உள்ள அனைத்து இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குமான யோகா (சூரிய நமஸ்காரம்) பயிற்சியினை செயற்படுத்தும் திட்டம் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. 
 
இளம் சிறார்களுக்கு அவர்கள் மனம் ஏற்றுக் கொள்கின்ற வளரும் சிறு பருவத்திலேயே உயர்வான வாழ்வின் மதிப்பீடுகளை நன்கு கிரகித்துக் கொள்ளவும்  ஒழுக்கந்தரும் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும்  மனதிலும் உணர்ச்சிகளிலும் அறிவிலும் நீதிநெறி வழியிலும் ஆன்மீகத்திலும் மலர்ந்து விரிந்து முழுமையான ஆளுமைத் தன்மையை வளர்க்கவும் அவர்களது  இதயங்களில் உள்ள தெய்வீகத் தாமரையை மலரச்செய்வதற்கும் பயிற்சியளித்து   வழிகாட்டி   ஒழுக்க நெறிமுறை சார்ந்த சமூகத்தை உருவாக்கும் இலட்சிய நோக்குடன் இந்துசமயஇ கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தின் ஓரங்கமாக யோகா (சூரிய நமஸ்காரம்) பயிற்சியினை  இலங்கைத்தீவில் உள்ள அனைத்து இந்துசமய அறநெறிப் பாடசாலைகளுக்கும் செயற்படுத்தும் திட்டம் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.  
 
இந்துசமயஇ கலாசாரக் கற்கைகள் நிறுவகமூடாக யோகாசன வளவாளர்களாக இணைக்கப்பட்டுள்ள போதனாசிரியர்கள் மூலமாகவும் இந்துசமய அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களிற்கு யோகாசனம் – சான்றிதழ்ப் பயிற்சிநெறியினை வழங்கி அவர்கள் மூலமாகவும்  முதற்கட்டமாக அனைத்து இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் சூரியநமஸ்காரம் பயிற்சியினை வழங்குவதற்குவதற்கும் தொடர்ந்து   அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசனம் – சான்றிதழ்ப் பயிற்சிநெறியினை  நடைமுறைப்படுத்துவதற்கும் இந்துசமயஇகலாசார அலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. என்றார்

Related posts