எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் பரீட்சைக்கான வழிகாட்டல் கையேடு வழங்கிவைப்பு

எஸ்.சபேசன்

எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் (எஸ்டா ) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட   வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 05 ஐ  சேர்ந்த 30 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு .வித்தியாலய அதிபர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  இந் நிகழ்வில் எஸ்டா அமைப்பின் ஸ்தாபகத்தலைவர் சமூக சேவகர் அ .வசீகரன் ஆலோசகர் தேசகீர்த்தி ச. பேரின்பநாயகம் செயலாளரும் ஆசிரியருமான இ . ஜீவராஜ் மத்திய குழு உறுப்பினர்களான தேவகிருஷ்ணன் நிலோஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

இவ் அமைப்பானது பல வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச மாணவர்களது கல்வி முன்னேற்றத்திற்காகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழுகின்ற குடும்பங்களின் வாழ்வாதரத்திற்காகவும் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் அ.வசிகரனின் தலைமையில் முனனெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts