மார்கழி மாத மகிமை!

பன்னிரண்டு மாதங்களில் மார்கழி மாதத்திற்கென தனிச் சிறப்பு உண்டு. தனி மகிமை உண்டு. இந்துசமயத்திற்கு மட்டுமல்லாது சகலசமயங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது இம் மார்கழி மாதம்.
 
“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் “என பகவான் கிருஷ்ணர் சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.
 
இந்த மாதம் ஆன்மீகத்தில் தேவர்களுக்கான வைகறை அதிகாலை நேரமாகக் குறிப்பிடப்படுகி றது. எனவே இந்த மாதம் முழுவதும் இறை வழி பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்று ம் அழைக்கப்படுகிறது.
 இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வாசலில் வண்ணக் கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.
 
ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.
மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.
 
இம்மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் என்றும் பதினாறு மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. ம்ருத்யுஞ்ச ஹோமம் செய்ய இம்மாதம் சிறந்தாகக் கருதப்படுகிறது.
 
இம்மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனும ஜெயந்தி, பாவை நோன் பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், போன்ற விழாக்க ள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற் றப் படுகின்றன.
 
திருவாதிரை:  
திருவாதிரை திருவிழா மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப் படுகிறது. இவ்விழா வானது சிவபெருமானின் வடிவமான ஆடலரசன் நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது.
திருவாதிரைக் கொண்டே சிவபெருமானு க்கு ஆதிரையன் என்ற பெயர் வழக்கத் தில் உள்ளது. இவ்விழாவானது 1500 ஆண்டுகள் பழமையானது.
இவ்விழா பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தங்கள து பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். திரு வாதிரை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்தி ன் ஒரு சில பகுதிகள்இ இலங்கையில் உள்ள தமிழ்மக்கள் ஆகியோரால் மிகவிம ர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
 
தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திரகோச மங்கையிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 
இவ்விழாவின்போது திருவாதிரைக்களியும், ஏழுகறிக்கூட்டும் இறைவனுக்கு படைக்கப் படுகின்றன. திருவாதிரைக்கு ஒருவாய் களி என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும்.
இன்றைய தினம் விரதமுறை மேற்கொள்ளப் படுகிறது. இவ்விரதம் சிவனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விரத வழிபாடு மேற்கொண்டால் நடனகலையி ல் சிறக்கலாம்.
வைகுண்ட ஏகாதசி:  
வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பி றையில் கொண்டாடப் படுகிறது. வைகு ண்ட ஏகாதசியில் திருமால் வழிபாடு மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது.
எல்லா இந்து மக்களாலும் இத்தினத்தில் விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. திருமாலை வழிபடும் விரதமுறைகளில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது.
காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை,ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியா கும். இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்சியாகும்.
வைகுண்ட ஏகாதசி அன்று துளசி நீரினை மட்டும் உட்கொண்டு பகல் மற்றும் இரவு விழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தை நல்கும் என்று கருதப்படுகிறது.
பாவை நோன்பு:
ஆயர்பாடியில் கோபிய ர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்கு சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதமாயி ன் இவ்விரதம் பாவை நோன்பு என்று வழங்கலாயிற்று.
 
ஆண்டாள் பாவை நோன்பை மேற்கொண்டே அரங்கனை கணவனாக அடைந்தாள். பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாம லும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல் புறஅழகில் நாட்டம் செலுத் தாமல் இறைநாட்டத்தில் மட்டும் மனதி னைச் செலுத்தி பாவைநோன்பினை மேற்கொண்டாள்.
எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலை யில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் எழுதிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.
திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும்இ குடும்ப நலன் வேண்டியும் இவ்விரத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
திருவெம்பாவை நோன்பு:  
திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி யில் வரும் திருவாதிரைக்கு ஒன்பது நாட் களுக்கு முன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது திருவாதிரையோடு சேர்த்து விரத நாட்கள் மொத்தம் பத்து நாட்கள் ஆகும்.
இந்நோன்பில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவகாமியுடன் கூடிய நடராஜரை வழிபடுவர். இவ்விரதத்தின்போது ஒரு வேளை அவித்த உணவினை மட்டுமே உண்பர்.
இவ்விரத்தினை பெரும்பாலும் கன்னிப் பெண்கள் கடைப்பிடிப்பர். இவ்விரதத்தின் போது திருவெம்பாவை பாடல்கள் பாடப் படுகின்றன. இவ்வழிபாட்டில் பிட்டு படை க்கப்படுகிறது. இதனால் இவ்வழிபாடு பிட்டு வழிபாடு என அழைக்கப்படுகிறது.
முருகன் படி உற்சவம்:  
ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந்தேதி மலைமேல் உள்ள முருகன் கோவில்களில் படி உற்சவம் என்ற விழா சிறப்பாக நடைபெறுகிறது.
அன்றைய தினம் பக்தர்கள் குழுக்களாக மலை படிக்களின் ஒவ்வொரு படியிலும் நின்று திருப்புகழ் பாடல்களைப் பாடுகின் றனர். இவ்விழா அறுபடை வீடுகளில் ஒன் றான திருத்தணியில் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சஷ்டி விரதம்:
இவ்விரதம் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி மார்கழி  வளர் பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்விரத முறையில் ஆண்கள் வலக்கை யிலும்இ பெண்கள் இடக்கையிலும் 21 இழைகளாலான காப்பினைக் கட்டிக் கொள்கின்றனர்.
முதல் 20 நாட்களும் ஒரு வேளை மட்டும் உணவினை உட்கொள்கின்றனர். கடைசி நாள் முழுஉபவாசம் மேற்கொள்கின்றனர்.
விரதத்தின் நிறைவு நாள்அன்று பலவித மான உணவுப்பொருட்களை தானமாகக் கொடுப்பர். இவ்விரதத்தின் பலனாக நல்ல வாழ்க்கைத் துணை, நற்புத்திரப் பேறு ஆகியன கிடைக்கும்.
அனுமன் ஜெயந்தி:  
மார்கழி மாதத்தின் மூல நட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை அன்று அனுமன் ஜெயந்தி தமிழ்நாட்டில் கொண்டாடப் படுகிறது.அனும ஜெயந்தி அன்று விரதம் மேற்கொண்டு மன உறுதி, ஆற்றல், தைரியம் ஆகியவற்றை அருளுமாறு பிரார்த்தனை மேற்கொள்ளப் படுகிறது. அனுமனிற்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் மேற்கொள்ள படுகின்றன.
இவ்வாறாக மார்கழியில் பிள்ளையார், முருகப்பெருமான், சிவபெருமான், திருமால், என எல்லா கடவுளுரும் வழிபடப்படு கின்றனர்.
இதுவே மார்கழி மாத சிறப்பு ஆகும்…

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா)

Related posts