மட்டகளப்பு மாவட்டத்தின் அனர்த்த நிவாரண சேவைகள்
உத்தியோகஸ்த்தர்களுக்கு மடி கணணிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட
செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார்
தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர்ஏ.எஸ்.சியாத் ஒழுங்கு செய்திருந்தார் இந் நிகழ்விற்கு தேசியஅனர்த்த நிவாரண சேவைகள் நிலைய ஒருங்கிணைப்பாளர் ர.சிவநாதன்மற்றும் பதினான்கு பிரதேசசெயலகங்களில் பணியாற்றுகின்ற
அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டு மடிகணணிகளை பெற்றுக்கொண்டனர்.
மட்டகளப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அவசர அனர்த்தநிலைமைகளின் போது பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நிவாரணம்
வழங்கல் முண்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான பிரதேசமட்ட திட்டங்கள்தயாரத்தல்ரூபவ் தகவல்களை பரிமாறல்ரூபவ் தரவுகளை பேணல் போன்றநடவடிக்கைக்கு ஏதுவாக மட்டகளப்பு மாவட்டத்தின் 14பிரதேச செயலகங்களில்பணியாற்றுகின்ற அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகஸ்த்தர்களுக்குமடி கணணிகளை பெற்று கொடுக்கவேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர்மா.உதயகுமார் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்தார்.
அடிப்படையில் பொது நிiவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின்
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் கீழ் கடமையாற்றும்
உத்தியோகஸ்தர்களுக்கு மடி கணணிகளை இன்று அரசாங்க அதிபரினால்
வழங்கிவைக்கப்பட்டது.