மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனால் வெல்லாவெளி பிரதேசத்தில் உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனால் வெல்லாவெளி பிரதேசத்தில் உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
 

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.இதனால் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் நிலைமை வெகுவாக பாதிப்புக்குளாகியுள்ளது.

இதனை வெல்லாவெளி பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகியிடம் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேசக்கரம் நீட்டியது.

வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களான மண்டூர் கிராமத்தில் 287 குடும்பங்களுக்கும், தம்பலவத்தையில் 80 குடும்பங்களுக்கும்,கணேசபுரத்தில் 80 குடும்பங்களுக்கும், மாலயர்கட்டில் 58 குடும்பங்களுக்கும்,சங்கர்புரத்தில் 75 குடும்பங்களுக்கும்,பாலமுனையில் 100 குடும்பங்களுக்குமாக குறித்த கிராமங்களில் வசிக்கும் 680 குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்களை சனிக்கிழமை(11)மாலை  வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.ராகுலநாயகி,மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் சுவாமி,கிராமசேவையாளர்கள்,அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டு நிவாரணப்பொதிகளை வழங்கி வைத்தார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலாளரின் அனுமதிக்கு அமைவாக குறித்த கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் ஊடானான குழுவினர்கள் நேரடி விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுக்கு உலருணவு பொதிகளை கையளித்தனர்

Related posts