இலங்கை கடற்படையினரால் பொத்துவில் பிரதேசத்தில் பொது மக்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

(திருக்கோவில்  நிருபர் -எஸ்.கார்த்திகேசு)
இலங்கை கடற்படையினரால் பொத்துவில் பிரதேசத்தில் பொது மக்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு.
 
ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் சிறுநீரக நோய் தடுப்பு செயலணியின் திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் இலங்கை கடற்படையினரினால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூன்று நிர்மாணிக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிகழ்வுகள் கடற்படையினரின் ஏற்பாட்டில் பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்று இருந்தன.
 
இவ் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிப்பதற்கான நிதி ஜனாதிபதி செயலணிக் குழுவின் ஊடாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றிற்காக 13 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்ததுடன் இவ் மூன்று குடிநீர் சுத்திகரிப்பு கட்டடங்களும் கடற்படையினரின்  பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டு இருந்தன.
 
இவ் திட்டத்தின் ஊடாக பொத்துவில் சர்வோதயபுரம் அல்மினா பாடசாலை பொத்துவில் முகுதுமகா விகாரை மற்றும் கோமாரி செல்வபுரம் ஆகிய மூன்று இடங்களில் இன்று திறந்து வைக்கப்பட்டு இருந்தன.
 
இந்நிகழ்வுகளில் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கடற்படையின் அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

Related posts