ஈரோஸ் மகிந்தவுடன் இணையவில்லை- ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன்

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஈரோஸ் கட்சி ஆதரவு வழங்கியதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையென ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன் தெரிவித்தார்.
 
கல்லடியிலுள்ள வெய்ஸ் ஓப் மீடியா காரியாலய மண்டபத்தில்  செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
வன்னியில் உள்ள ஈரோஸை சேர்ந்த துஸ்யந்தன் என்பவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்ததாக செய்திகள் வெளிவந்தன. ஈரோஸ் எந்த பேரினவாத கட்சிகளுடனும் இணையவில்லை இணையப்போவதுமில்லை.
 
அவர் முன்பு ஈரோஸ் கட்சியில் இருந்து கட்சியின் பெயரை கழங்கப்படுத்தியதற்கு அவருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்துள்ளோம். இவர் கடந்த 25 திகதி வழக்கிற்கு நீதிமன்றிற்கு ஆஜராகவில்லை அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
எங்களால் விலக்கப்பட்டவர் மகிந்தவோடு இணைந்தால் ஈரோஸ் என பார்க்கவேண்டாம் அவருக்கும் ஈரோசுக்கும் சம்மந்தமில்லை இந்த துஸ்யந்தன் றிசாட் பதுர்தீன்னுடன் ஒரு குறுப்பை வைத்துக் கொண்டு ஈரோஸ் என்று சொன்னதும் இடைத்தங்கள் முகாமில் இருந்து மக்களை வெளியில் கொண்டுவந்து விட்டுவிட்டு பணங்களை பறித்து அடாவடி செய்ததன் காரணமாக மக்கள் தோழர்களின் விருப்பத்துக்கமைய அவரை கட்சியில் இருந்து விலக்கி விட்டோம்.
 
அவரை சுரேஸ் பிறேமச்சந்திரனும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் இணைந்து கொண்டு அவரை ஈரோஸ் சொல்லி தங்களுக்குள் பலத்தை கூட்டுவதற்கு காட்டுகின்றனர். இந்த சிவசக்தி ஆனந்தன் சுரேஸ் பிறேமச்சந்திரணின் மண்டையன் குழுவின் உறுப்பினர்.
 
ஈரோசை கூடுதலாக கொலைசெய்த பங்கு இந்த சிவசக்தி ஆனந்தனுக்கு தான் உண்டு வடகிழக்கு அணைத்து மக்களுக்கும் தெரியும் அதை மறைப்பற்காக ஈரோஸ் தங்களுடன் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் ஈரோஸ் யாருடனும் இணையவில்லை. 
 
சம்மந்தன் போல ஏனைய கையாள் ஆகாத தமிழ் கட்சி தலைவர்கள் போல இருக்கின்றதற்கு ஈரோஸ் தயாரல்ல வரதர் அணி, ஈ. பி. ஆர். எல். எப். சுரேஸ்அணி ஈ. பி. ஆர். எல். எப். , நாபா அணி ஈ. பி. ஆர். எல். எப். என கிரிகn;கட் அணிபோல கட்சிகளை வைத்துக் கொள்ள ஈரோஸ் தயாரில்லை ஈரோஸ் கட்சி ஒன்றுதான். 
 
நாங்கள் யாரையும் ஆதரிப்பது என்றாலும் சில நிபந்தனைகளுடனேயே ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிப்போம். இணைந்த வடகிழக்கு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வட கிழக்கில் குடும்பங்கள் தலைமை தாங்கும் பெண்களுக்கான வாழ்வாதார உதவிகள், மலையக தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய் ஆகிய ஒப்பந்தகளுக்குள் எந்த ஜனாதிபதி வேட்பாளர் வருகின்றாறோ அவர்களுக்கு வடகிழக்கு மலையக தமிழர்கள் வாக்களிப்பார்கள்.
 
எழுந்தமானமாக கடந்த காலத்தில் வாக்களித்து ஏமாந்த நிலை இனியும் ஏற்படக்கூடாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ தமிழ் மக்களுக்குள் வந்து தமிழ் கட்சிகளின் முகத்திரையினை கிளிப்பேன் என்று கூறியிருக்கின்றார்.
 
முதலில் நாமல் ராஜபக்ஷவின் முகத்தில் உள்ள திரையினை கிளியுங்கள். வன்னி யுத்ததின்போது காணாமல்போன இலட்சக்கணக்கானவர்கள் எங்கே? அப்பாவி தமிழ் இளைஞர்களை சிறையில் அடைத்த நீங்கள் அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கையெடுத்தீர்களா?
 
நீங்கள் ஓடிய வெள்ளைவானுக்கும் அதில் கடத்திய மக்களுக்கும் கணக்கு இல்லை அவர்கள் எங்கே என்றும் இல்லை. நீங்கள் எங்களுக்கு முகத்திரையினை கிழிக்க வரவேண்டாம். நாங்கள் உங்களது முகத்திரையினை கிழக்க முற்பட்டால் நீங்கள் தாங்கமாட்டீர்கள்.
 
எதிர்வரும் தேர்தல்களை முகம்கொடுப்பதற்கு அனைத்து தமிழ் கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். தமிழ் மக்களின் நன்மைக்காக ஈரோஸ் எதனை விட்டுக்கொடுப்பதற்கு தயாராகவுள்ளது.

Related posts