மக்கள் நலன் காப்பகத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்க்கான வீடு வழங்கி வைப்பு

 
 
(டினேஸ்)
 
முன்னாள் போராளிகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கணவனை இழந்த பெண் தலைமைத்துவம் தாங்குகின்ற குடும்பங்கள் மற்றும் மாவீரர் குடும்பத்தாரின் வாழ்வாதாரம் போன்ற செயற்பாடுகளுக்காக கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நலன் காப்பகம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்க்கான வீடு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 07 ஆம் திகதி பாடசாலை வீதி திருக்கோவில் விநாயகபுரத்தில் அம்பாறை மாவட்ட மக்கள் நலன் காப்பகத்தின் இணைப்பாளர் நாகமணி கிருஸ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்றது.
 
இதன் போது காப்பகத்தின் வட கிழக்கு மாகாணங்களின் செயலாளரும் வலிந்து காணமலாக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவியுமான தம்பிராசா செல்வராணி முன்னாள் போராளிகள் ஒன்றியத்தின் கேசரி வர்மன் மற்றும் மக்கள் நலன் காப்பகத்தின் ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இச்செயற்பாடானது கடந்த கால யுத்தத்தின் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக்கோட்டின் வாழ்கின்ற சின்னத்தம்பி சுப்ரமணியம் என்பவருக்கு காப்பகத்தினூடாக ஒரு லட்சம் ரூபா செலவில் வீடு அமைத்துக்கொடுக்கபட்டமை குறிப்பிடத்தக்கது என மக்கள் நலன் காப்பகத்தின் அம்பாறை மாவட்ட  இணைப்பாளர் நாகமணி கிருஸ்ணபிள்ளை தெரிவித்திருந்தார்.
 
 

Related posts