உலக தமிழர் மாணவர் ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினர்களின் சந்திப்பும் புதிய நிர்வாக தெரிவும்

உலக தமிழர் மாணவர் ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினர்களின் சந்திப்பும் புதிய நிர்வாக தெரிவும் நேற்றுமுன்தினம்  யாழ் பல்கலைக்கழக மாணவர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் அதன் தலைவர் எம். தனுசன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது வட கிழக்கு பகுதிகளில் உள்ள ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்கள் மற்றும்  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முதலில்  புதிய உறுப்பினர்களுக்கு ஒன்றியத்தின் உருவாக்கம் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமாகவும் தெளிவு படுத்தியதுடன் புதிய மத்திய குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர் அதில் தலைவராக எம். தனுசன் பொதுச்சங்கம் செயலாளராக பி.அனுறாஜ் வடக்கு மாகாண செயலாளராக ஜக்சன் கிழக்கு மாகாண இணைப்பாளராக எம். டிலான்  வடக்கு கிழக்கு ஒருங்கினைப்பாளராக கிருஸ்ணமீனன் யாழ் மாவட்டம் குணாகரன் திருமலை மாவட்டம் ஜீவலதன் மன்னார் மாவட்டம் சிவநாதன் வவுனியா மாவட்டம் சுதர்சன் அம்பாறை மாவட்டம் வினோத் மட்டக்களப்பு மாவட்டம் பிரசாத் முல்லைத்தீவு மாவட்டம் சங்கீதனன் கிளிநொச்சி மாவட்டம் எம். எடிசன் ஆகியோர்கள் மாவட்ட இணைப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts