காணமால்போனோர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்காக எமது அமைப்பு செற்படுகின்றது (கலாநிதி கணேஸ்)

 

அம்பாரை மாவட்டத்தில் காணமால்போனோர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்காக காணாமல்போனர்களுக்கான அமைப்பினை ஸ்தாபித்து அதற்கான சேவைகளை மாணவர் மீட்புப்பேரவை மேற்கொண்டு வருகின்றது. என கல்முனை மாணவர்மீட்புப் பேரவையின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் கல்முனை மாணவர் மீட்புப் பேரவையின் ஐரோப்பியக் கிளையினூடக உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு பேரவையின் கல்முனை அலுவலகத்தில் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றபோது தலைமையுரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாணவர் மீட்புப்பேரவையின் உறுப்பினர் அ.நிதாஞ்சன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் வாழ்வாதரத்தினை மேம்படுத்துவதற்காக வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற 8 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் கல்வி நடவடிக்கைக்கும் நிதி உதவியும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாணவர் மீட்புப்பேரவையின் ஐரோப்பியக்கிளையின் பொறுப்பாளர் இ.விஜயகுமார்,கல்முனை தேவசபையின் தலைமைப்போதகர் கலிஸ்டர் கோமஸ்,பாவாணர் அக்கரைப்பாக்கியன் உட்பட மாணவர்மீட்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

அவர் மேலும்பேசுகையில் இன்று காணாமல் போனோர்களுக்கு நியாயம் கேட்டவர்களாக எமது மக்கள் இருந்துகொண்டு இருக்கின்றனர் .

கடந்த காலங்களில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு எமது சமூகம் இருந்துகொண்டு இருக்கின்றது இதனால் தாங்கள் வறுமைநிலையில் இருந்து இன்னும் மீளமுடியாதவர்களாக பலர் கஸ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர் இவ்வாறானவர்களை இனங்கண்டு எங்களது பேரவையின் ஐரோப்பியக் கிளையினூடாக வாழ்வாதரத்திற்கான பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

வெளிநாடுகளில் இருந்துகொண்டுதான் பல அமைப்புக்களின் கிளைகள் இலங்கையில் செயற்படுகின்றது ஆனால் எங்களது அமைப்பு அவ்வாறு இல்லாது இலங்கையில் அதுவும் அம்பாரைமாவட்டத்தில் இருக்கும் இவ் அமைப்பின் கிளையாகவே மாணவர்மீட்புப்பேரவையின் ஐரோப்பியக்கிளை அங்கு இயங்கிக்கொண்டு இங்கு வாழ்வாதாரத்திற்கு அல்லல் படும் மக்களின் நலன்காக்கும் நோக்குடன் செயற்பட்டுவருகின்றது.

பாதிக்கப்பட்ட சமூகத்தினை உச்சநிலைக்குக் கொண்டுவருவதே எங்கள் அமைப்பினதுநோக்கமாக இருக்கின்றது பாதிக்கப்பட்ட சமூகத்தில் இருக்கும் மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கின்ற உதவிகளை சரியாகப் பயன்படுத்தி அதன்மூலம் நீங்கள் கல்வியில்முன்னேறி சிறந்த கல்வியலாளர்களாக எங்களது சமூகத்தினை வழிநடத்தவேண்டும் அப்போதுதான் பாதிக்கப்பட்டு இருக்கும் எமது சமூகம் முன்னேற்றம்அடையவாய்ப்பாக அமையக் கூடும் என்றார்.

Related posts