காரைதீவில் கொரோனா செயலணிக்குழு நடவடிக்கைகள் ஆரம்பம்!

அக்கரைப்பற்று கொரோனா கொத்தணி சம்பவத்தையடுத்து காரைதீவில் அவசரமாக கொரோனா செயலணிக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் ((28)ஆரம்பமாகியது.
 
காரைதீவு பிரதேசசபை நிருவாகபணிமனையின் மேல்மாடியில் இக்குழு இயங்கிவருகிறது. இக்குழுவில் பிரதேசசெயலகம் பிரதேசசபை சுகாதாரத்துறை சார்ந்த பிரதிநிதிகளும் இராணுவம்பொலிசார் சார் பிரதிநிதிகளும் அங்கம்வகிக்கின்றனர்.
 
இதற்கான தீர்மானம் காரைதீவு பிரதேச கொரோனா வழிகாட்டல் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் சுகாதாரவைத்தியஅதிகாரி ஜீவா சிவசுப்பிரமணியம் ஆகியோர் அடங்கியகூட்டத்தில்  பல முக்கிய தீhமானங்கள் எடுக்கப்பட்டன.
 
அவற்றுள் ஒன்றான பிரதேச கொரோனா செயலணிக்குழுவை ஸ்தாபித்து அதனை தொடர்ச்சியாக இயங்கவைப்பதனூடாக காரைதீவை கொரோனாத்தொற்றிலிருந்து பாதுகாப்பது என்ற தீர்மானத்திற்கமைவாக நேற்றுமுதல் இக்குழு இயங்கத்தொடங்கியுள்ளது.
 
இக்குழுவிற்கு பொதுமக்கள் கொரோனா தொடர்பான முறைப்பாடு தெரிவிக்கலாம். அதையிட்டு இக்குழு ஸ்தலத்திற்கு விஜயம்செய்து ஆராய்ந்து நடவடிக்கைஎடுக்கும். நேற்றையதினமே வெளியூர் வியாபாரிகள் சிலரை இனங்கண்டு வெளியேற்றினர்.7முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
தேவைப்படின் ரோந்து செல்லவும் ஏற்பாடாகியுள்ளது.

Related posts