சுவிஸ் உதயத்தின் மூலம் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

சுவிஸ் உதயம் கிழக்கு கிளையின்  ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்குடா வலயத்திலுள்ள சந்திவெளி சித்தி விநாயகர் பாடசாலையில் கலைப்பிரிவில் வறிய நிலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இருவருக்கு இன்று (24.03.2024) துவிச்சக்கர வண்டிகள் அமைப்பின் தலைவர் மு.விமலநாதன் தலைமையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இத் துவிச்சக்கர வண்டிகள் அமைப்பின் தாய்ச் சங்க தலைவர் சுதர்சன் லிங்கன் அவர்களது சகோதரியின் மகனான பாரதிதாசன் என்பவரின் நினைவாக வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் அமைப்பின் தாய்ச்சங்க தலைவர் சுதர்சன் லிங்கன் மற்றும் தாய்ச்சங்க பொருளாளர் தொழிலதிபர் சமூகசேவகர் க.துரைநாயகம் கிழக்கு கிளை செயலாளர் ரொமிலா செங்கமலன் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

இதன்போது அம்மாணவர் ஒருவரின் வீட்டிற்கான குடிநீர் வசதியினை பெற்றுத்தருவதாகவும் அமைப்பின் தாய்ச்சங்க தலைவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts