திருக்கோவில் பிரிவில் 105பேர் தனிமைப்படுத்தலுக்குள்..

எமது திருக்கோவில் பிரதேசம் பரந்துபட்டது. இங்கு 105பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு இன்று அனைவரும் விடுதலையாகிவிட்டனர்.யாருக்கும் கொரோனாத்தொற்று இல்லை.
 
இவ்வாறு  திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தெரிவித்தார்.
 
விநாயகபுரத்தில் தனிமைப்படுத்தலுக்குள்ளான சிலர் தாம் ஜீவனோபாயமின்றி தவிப்பதாகத் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக அவரிடம் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்:
 
தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நபருக்கு ஒருவாரத்திற்கு 1000 ருபா பெறுமதியான உலருணவு வழங்கப்படவேண்டும். உதாரணமாக ஒருகுடும்பத்தில் 5பேரிருந்தால் ஒரு வாரத்திற்கு 5000ருபா பெறுமதியான உலருணவுவழங்கப்படவேண்டும். இவ்வாறு இருவாரங்களுக்கு 10ஆயிரம் ருபா பெறுமதியான உலருணவுவழங்கப்படவேண்டும்.
 
எமது பிரதேசத்தில் 105பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் சுமார் எட்டுப்பேர் அளவில் தனியாளாக இருந்தனர். ஏனையோர் அனைவரும் குடும்பத்தினர்.
 
ஆனால் கொரோனா அவசரதேவைக்கென்று எமக்குக்கிடைத்ததே  2லட்சருபா. அந்த  நிதியில் முடிந்த உதவிகளைச்செய்தோம்.
 
வினாயகபுரப்பகுதியில் 14பேர் தனிமைப்படுத்தலுக்குட்பட்டார்கள். அனைவரும் இன்று விடுதலையாகியுள்ளனர். அவர்களில் சிலருக்கு சிலர் உலருவு நிவாரணம் வழங்க சிலருக்கு பலர் வழங்கியுள்ளனர்.
நாமும் முடிந்தளவு தனவந்தர்கள் அமைப்புகளிடம் வேண்டுகோள்விடுத்து உலருணவு நிவாரணங்களை வழங்கிவந்தோம்.
 
காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் சமுகசெயற்பாட்hளர்களான வினோஜ்குமார் சகாதேவராஜா போன்றோரின் உதவியால் மண்டானை காயத்திரிகிராமம் தாண்டியடி உமிரி திருப்பதி சங்குமண்கிராமம் சங்குமண்கண்டி தாமரைக்குளம் வினாயகபுரம் போன்ற கிராமங்களில் சுமார் 800குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்திருக்கிறோம்.
 
இவர்களைப்போல் மேலும் பல்வேறு தனவந்தர்கள் பொது அமைப்புகள் உதவியிருக்கின்றன. புலம்பெயர் அமைப்புகள் தாமாக முன்வந்து உதவியிருக்கின்றன.
 
மிகவும் பின்தங்கிய தங்கவேலாயுதபுரம் கஞ்சிக்குடிச்சாறு போன்ற கிராமங்களுக்கும் சென்று வழங்கியிருக்கிறோம்.
பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இவைகள் கிடைத்துள்ளன. சிலர் விடுபட்டிருக்கலாம்.
 
 எதுஎப்படியிருப்பினும் கிராமசேவை உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான செயறபாட்டினால் பெரும்பாலும் யாரும் விடுபடாதமாதிரி வழங்கியிருக்கிறோம்.
இன்னும் தேவைப்பாடுகள் உள்ளன. ஜீவனோபாயம் பற்றி இன்றைய சூழலில் அவர்களே கரிசனை காட்டவேண்டும். நாம் அடிப்படை உணவு உறையுள் தொடர்பாக சுகாதாரம் பற்றிச்சிந்திக்கலாம்.
 
பொதுவானவேலைப்பாட்டில் சிறுதவறுகள் வரலாம். அதற்கு நாம் விதிவிலக்கல்ல. எனினும் இக்கொரோன காலகட்டத்திலும் நாம் தினமும் இங்குவந்து மக்களுக்கான சேவையை முன்னெடுத்ததில் திருப்தி.
 
என்னுடன் உதவிபிரதேசசெயலாளர் சதீஸ் உயரதிகாரிகள் அலுவலக உத்தியோகத்தர்கள் கிராமசேவைஉத்தியோகத்தர்கள் சமுர்த்திஉத்தியோகத்தர்கள் பொருளாதாரஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அலுவலக பணியாளர்கள் என பலதரப்பட்டவர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியதன்பலனாக திருக்கோவில் பிரதேசம் இன்று பிரச்சினையின்றி இருக்கின்றது. என்றார்.

Related posts