நான்கு யுகங்களுக்குரிய ஓவியங்களுடன் அழிவின் விளிம்பில் காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஹிந்தகல லென் விகாரையை உடனடியாக புனரமைப்பதற்கு கௌரவ பிரதமர் அறிவுறுத்தல்

அநுராதபுரம், கம்பளை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய நான்கு யுகங்களுக்குரிய ஓவியங்களை கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஹிந்தகல லென் விகாரையை உடனடியாக புனரமைக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
 
வரலாற்று சிறப்புமிக்க ஹிந்தகல லென் விகாரை அழிவின் விளிம்பில் காணப்படுவதாக அண்மையில் தேசிய நாளிதழ் ஒன்றில் வெளியாகிய செய்தியை கவனத்தில் கொண்டு கௌரவ பிரதமரினால் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன அவர்களுக்கு இது தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
 
வரலாற்று சிறப்புமிக்க ஹிந்தகல லென் விகாரையின் ஓவியங்கள் காணப்படும் பல இடங்கள் தற்போதுவரை அழிவடைந்து வருவதாகவும், அது தொடர்பில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு விகாரைக்கு பொறுப்பாக செயற்படும் அம்பில்மீகம தம்மகித்தி தேரர் குறித்த நாளிதழுக்கு தெரிவித்திருந்தார்.
 
வரலாற்று சிறப்புவாய்ந்த இந்த லென் விகாரையை உடனடியாக புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையில் துரிதமாக ஆரம்பிக்கப்படும்.
 
தொல்பொருள் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் அதிகாரிகள் ஹிந்தகல லென் விகாரைக்கு விஜயம் செய்து இதுவரை வழங்கிய பரிந்துரைகளுக்கமைய இந்த புனரமைப்பு நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும்.

Related posts