நாவிதன்வெளியில் முதல்முறையா சாதனையாளர்களின் தாய்மாருக்கான கௌரவிப்போடு மகளிர் தின கொண்டாட்டம்.

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் திகதி நாடளாவிய ரீதியாக கொண்டாடப்படுகின்ற அதேவேளை நாவிதன்வெளி பிரதேச செயலகமும் பெண்கள் மகா சபாவும் இணைந்து மத்தியமுகாம் 3, 11ம் கிராமம் ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
 
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா மத்தியமுகாம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.விஜேசிங்க விவசாய அமைச்சின் உதவி செயலாளர் எஸ்.பார்த்தீபன் இந்துமத மதகுரு சிவஸ்ரீ.தி.கு.தேவகுமார் குருக்கள் மருத்துவத் துறைக்கு தேர்வான மாணவி ஜே.எப்.சஜீரா நாவிதன்வெளி பிரதேசத்தின் சாதனையாளர்களை பெற்ற தாய்மார்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மகளிர் அமைப்புக்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
 இந்நிகழ்வின் ஆரம்பத்தில் மத்தியமுகாம் தபால் நிலையம், பொலிஸ் நிலையம் மற்றும் ஆலய வளாகத்திலும் அதிதிகளால் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டு மகளிர் அமைப்பினர் பேரணியாக அழைத்து வரப்பட்டனர். மகளிர் பெருமை போற்றும் கலை நிகழ்வுகளும் இடம்ற்று பல துறைகளிலும் சாதனை படைத்து நாவிதன்வெளி பிரதேசத்துக்கு பெருமை சேர்த்த சாதனையாளர்களின் தாய்மார் மாலை அணிவித்து பரிசுப் பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 
அதன்படி முதன்முறையாக அன்னமலை பிரதேசத்திலிருந்து இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது விவசாய அமைச்சின் உதவிச் செயலாளராக பணியாற்றும் எஸ் பார்த்தீபன் அவர்களின் தாய் திருமதி. எஸ்.கமலேஸ்வரி அன்மலையில் இரண்டாவதாக நிர்வாக சேவைக்கு தெரிவாகி தற்போது ஆலயடிவேம்பு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளராக பணியாற்றும் ஆர்.சுபாகர் அவர்களின் தாய் திருமதி. கே.நவமணி இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தேர்வாகி தற்போது சம்மாந்துறை வலய கல்வி பணிமனையில் பணியாற்றும் திரு.நௌசாட் அவர்களின் தாய் திருமதி ஏ.எல்.அவ்வா உம்மா கல்வி நிர்வாக சேவையில் தேர்வாகி தற்போது சம்மாந்துறை வலய கல்வி பணிமனையில் பணியாற்றும் திரு.ஹைதர் அலி அவர்களின் தாய் திருமதி. ஏ.எல்.எம்.பரிதா உம்மா  தேசிய மட்டத்தில் சிறந்த அறிவிப்பாளருக்கான
முதல் விருதினை   நாவிதன்வெளி பிரதேசத்திற்கு பெற்றுக்கொடுத்து  கே.கிலசன் அவர்களின் தாய் திருமதி.கே.புஸ்பலதா ஆகியோரும் 2019ம் ஆண்டில் மருத்துவத் துறைக்கு தேர்வான மாணவி ஜே.எஃப்.சஜீரா ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். சாதனையாளர்கள் கௌரவிப்புக்கள் பல இடம்பெறுகின்ற போதிலும் சாதனைக்கு காரணமான தாய்மாருக்கான கௌரவிப்பு நாவிதன்வெளி பிரதேசத்தில் இதுவே முதல் தடவை என்பது சிறப்பம்சமாகும்.
 

Related posts