பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டங்கள் தொடர்பாக அறிவூட்டும் செயலமர்வு

(எஸ்.குமணன்)

அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழுள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டங்கள் தொடர்பாக அறிவூட்டும் செயலமர்வுகளை மாவட்ட செயலகம் முன்னெடுத்து வருகின்றது.

 
இதற்கமைய நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள பொது மக்களிற்கு சிறந்த சேவையை வழங்கும் பொருட்டு உத்தியோகத்தர்களுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டங்கள் தொடர்பாக அறிவூட்டல் செயலமர்வு புதன்கிழமை(4)  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
 
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் என்.எம்.சப்றாஸ், புலனாய்வு உத்தியோகத்தர்களான ரி.சுதர்சன், எம்.எம்.ஏ.சுபைர் ஆகியோர்கள் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை மேற்கொண்டனர்.
 
இதன்போது அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் முறைப்பாடுகள் குறைவாக கிடைப்பது தொடர்பாகவும், கலப்படம், பற்றுச்சீட்டுக்கள் பெற்றுக் கொள்வதன் அவசியம், தரமற்ற பொருட்கள், விற்பனைக்கு அனுமதியற்ற பொருட்கள், விலையில் மாற்றம் செய்தல், குற்றங்கள், தண்டனைகள் தொடர்பாகவும் விளக்கங்களை வழங்கினார்கள்.

Related posts