மகிழூர்முனை சக்தி வித்தியாலயத்திற்குஅதிபராக வ.பேரின்பநாயகம் நியமனம்

அதிபர் சேவைத் தரம் 1 ஐச் சேர்ந்த திரு.வயிரமுத்து – பேரின்பநாயகம் மட்/பட்/மகிழூர்முனை சக்தி மகாவித்தியாலயத்தில் புதிய அதிபராக இன்று (04.04.2022) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

துறைநீலாவணைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்  கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானப் பட்டத்தையும், முதுகல்விமாணிப் பட்டத்தையும்,   தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா ஆகிய தொழிற்றகமையையும் பெற்றவராவார்.

1994 ஆம் ஆண்டில் ஆசிரியராக நியமனம் பெற்று மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியராக கடமையாற்றினார். தொடர்ந்து மட்/பட்/துறைநீலாவணை மகா வித்தியாலயம், மட்/பட்/உதயபுரம் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கணித பாடம் கற்பித்து சிறந்த அடைவினை வெளிக்காட்டியவராக திகழ்ந்தார்.

2012 இல் அதிபர் சேவையில் உள்வாங்கப்பட்ட இவர் மட்/பட்/உதயபுரம் தமிழ் வித்தியாலயம், மட்/பட்/துறைநீலாவணை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பிரதியதிபராகவும், மட்/பட்/கோடைமேடு நவசக்தி வித்தியாலயம், மட்/பட்/பெரியகல்லாறு புனித அருளாநந்தர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அதிபராகவும் கடமையாற்றி சிறந்த நிருவாகியாகவும் செயற்பட்டார்.

கடமையுணர்வும், கண்ணியமும் மிக்க திரு.வயிரமுத்து – பேரின்பநாயகம் அவர்கள் பட்டிருப்பு வலய அதிபர்கள் சங்கத்தினால் நடாத்தப்படும் பரீட்சைக் குழுவில் முக்கிய உறுப்பினராகவும் செயற்பட்டு வலயமட்டப் பரீட்சைகளை வெற்றிகரமாகச் செயற்படுத்திப் பாராட்டையும் பெற்றவராவார்.

Related posts