மட்டக்களப்பில் இம்முறை இரண்டு வாக்கெண்ணும் பிரதான நிலையங்களில் 67 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத்தேர்தல் 2020 இற்கான முடிவுகளை அறிவிப்பதற்காக இரண்டு பிரதான வாக்கெண்ணும் நிலையங்களில் 67 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தகவல் தெரிவித்தார். 
 
இம்முறை கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிக்க அனைத்து சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றி வாக்கெண்ணும் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு ஏற்றவாறு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைவாக இம்முறை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மற்றும் மகாஜனக் கல்லூரி என்பன பிரதான வாக்கெண்ணும் நிலையங்களாகவும் அவற்றில் 67 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. 
 
இவற்றில் கல்குடா தேர்தல்; தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக 15 வாக்கெண்ணும் நியைங்களும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக 33 வாக்கெண்ணும் நிலையங்களும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக 12 வாக்கெண்ணும் நிலையங்களும் தபால்மூல வாக்குளை எண்ணுவதற்காக 07 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
 
மேலும் வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் வழங்கள், பொறுப்பபேற்றல் கடமைகளில் 70 உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களும், 120 சிரேஸ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்களும், 140 கனிஸ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்கள் எழுதுவினைஞர்களும், 60 சுகாதார வழிகாட்டல் உத்தியோகத்தர்களும், 60 அலுவலக உதவியாளர்கள் அடங்கலாக 450 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
 
இதுதவிர இவ்வாக்கெண்ணும் பணிகளுக்காக 67 பிரதான வாக்கெண்ணும் அலுவலர்களும், 274 உதவித் தெரிவத்தாட்;சி அலுவலர்களும், 449 சிரேஸ்ட தலைமைதாங்கும் அலுவலர்களும், 620 வாக்கெண்ணும் கனிஸ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்கள் எழுதுவினைஞர்களும், 67 சுகாதார வழிகாட்டல் உத்தியோகத்தர்களும், 134 அலுவலக உதவியாளர்கள் அடங்கலாக 1611 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 
 
இதற்கமைய இவ்வாக்கெண்ணும் பணிகள் தேர்தல் தினத்திற்கு மறுதினமாகிய எதிர்வரும் ஆகஸ்ட் 06ஆந் திகதி காலை ஆரம்பிக்கப்படவுள்ளடை குறிப்பிடத்தக்கது.

Related posts