மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் கூடுதலான தொகையில் வாய்க்கால் புனரப்பு வேலைகள்

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நவகிரி பிரிவு ரீ-10 வாய்க்கால் புனரப்பு வேலைகளின் கால்கோள் விழா மட்டக்களப்பு நீர்ப்பாசன பணிப்பாளர் அசார் தலைமையில் தும்பங்கேணியில் நடைபெற்றது.

மேற்படி காள் கோள் விழாவில் பிரதம அதிதிகளாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீ.மோகனராஜாஇ மற்றும் கிறிப் திட்டத்தின் பணிப்பாளர் யானகி மீகஸ்தென்னஇ பீசீல் திட்ட முகாமையாளர் ஐ.பீ.அல்விஸ்இ நவகிரிப் பிரிவு பொறியியலாளர் மு.பத்மதாசன்  அசாற் முகாமைத்துவ பணிப்பாளர் யுனைட் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட நீர்ப்பாசன பொறியிலாளர்கள்இவிவசாயிகள் என பலரும் இந் நிகழ்வில கலந்து கொண்டனர்.

இத்திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் கூடுதலான தொகையான  ஐந்து கோடி பத்து லெட்சம் ரூபாவினை செலவு செய்து   புனருத்தாரணம் செய்யப்பட இருக்கும் வாய்க்காலின்  நீளம் ஐந்து கிலோ மீற்றராகும். இவ் வாய்க்காலினூடாக 1500 ஏக்கர் செய்கை    நேற்செய்கையினை மேற் கொள்ள முடியும் எதிர்பார்க்கப்படுகின்றது. விவசாயிகளுக்கு கூடுதலான பயனைக் கொடுக்ககூடி இவ்வாய்க்காலினை புணரமைப்பு செய்வது நீண்டநாள் கனவாகுமென் பணிப்பாளர் நாயகம் இதன் போது தெரிவித்தார்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் கூடுதலான தொகையில் வாய்க்கால் புனரப்பு வேலைகள்

Related posts