மாநகரசபைஉறுப்பினர் ஹென்றி மகேந்திரன் மீதான வழக்கில் திருப்பம்?

கல்முனைமாநகரில் அமைக்கப்பட்டிருந்த வீதிப்பெயர்ப்பலகையொன்றினை உடைத்ததாக த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஹென்றிமகேந்திரன் மீது தொடரப்பட்ட  வழக்கில் திருப்பம் ஏற்படலாமென தெரிவிக்கப்படுகிறது.
 
இவ்வழக்கு மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் 2022 பெப்ருவரி மாதம் 9ஆம் திகதிக்கு நீதிவான் சம்சுதீன் ஒத்திவைத்தார்.
 
கடந்த ஆறு(6)வருடங்களாக இவ்வழக்குவிசாரணை  கல்முனை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது.
 
இவ்வழக்கின் 34ஆவது தவணை நேற்றுமுன்தினம்(15) கல்முனை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எம்.சம்சுதீன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
அச்சமயம் கல்முனை மாநகரசபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக்  சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். அவர் அதற்கு பூரண தயார்நிலையில் இல்லாமையினால் மேலதிக விசாரணைக்காக வழக்கை எதிர்வரும் 2022 பெப்ருவரி மாதம் 9ஆம் திகதிக்கு நீதிவான் சம்சுதீன் ஒத்திவைத்தார்.
 
எதிராளி ஹென்றிமகேந்திரன்சார்பில் பிரபல சிரேஸ்டசட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தாவின் வழிநடாத்தலில் சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிவரஞ்சித் ,சட்டத்தரணி என் மதிவதனன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
 
35ஆவது தவணையின்போது எதிர்பாராத திருப்பம் ஏற்டலாமென தெரிவிக்கப்படுகிறது.
 
 

Related posts