முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின் கீழ் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
 
அவர்களுடன் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் பாரத லட்சுமண பிரேமச்சந்திராவை 2011ல் கொலை செய்த வழக்கில் துமிந்தா சில்வா குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டார்.
 
இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக 2016 செப்டம்பர் 8ஆம் திகதி துமிந்த சில்வாவுக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts