முஸ்லீம் முதலாளிகளின் நாட்கூலிகளாக முன்னாள் போராளிகள், கவலை தெரிவிக்கும் கலையரசன்.

நமது இனத்தின் இருப்புக்காக நீண்ட போராட்டங்களை நடத்தி பல தியாகங்களை செய்த பின்பும், இன்று மாற்று சமூகங்களிடம் மண்டியிட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னைநாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டத்தின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளருமான திரு கலையரசன் தெரிவித்துள்ளார். 
 
12/07/2020 அன்று, TRT வானொலியின் அரசியல் சமூகமேடை நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவிக்கும்போதே தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார். இவர் மேலும் குறிப்பிடுகையில், அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகள் வேலையின்மை காரணமாக மிகுந்த வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக முன்னாள் போராளிகளின் நிலைமை படுமோசமாக உள்ளது. இதனால் இவர்கள் மாற்று சமூக முதலாளிகளிடம், குறிப்பாக மாற்று சமூக முதலாளிகளிடம் வேலை தேடிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
இச் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தும் முதலாளிகள், இவர்களை தமது நாட்கூலிகளாக பயன்படுத்துவது மட்டுமல்லாமல், மதமாற்றம் செய்யும் நிலைகூட ஏற்பட்டுள்ளது. திரு.கலையரசன் அவர்கள் குறிப்பிடுவது போன்று, பல கவலைக்குரிய சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. மாற்று சமூக  முதலாளிகளால் வேலைக்கு அமர்த்தப்படும், தமிழ் இளம் பெண்கள், குறிப்பாக முன்னாள் போராளிகள் பாலியல் சுரண்டல்களுக்குள்ளாவதாகவும், அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, முஸ்லீம் ஆண்களின் மனைவிகளாக்கப் படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 
 
இக் குற்றச்சாட்டுகளை வலுவூட்டும் வகையிலேயே திரு.கலையரசனின் கருத்துக்களும் அமைந்துள்ளன. தமிழ் சமூகத்தில் அக்கறையுடையவர்கள், அம்பாறை மாவட்டத்தில் முதலீடுகளை செய்து தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இந்த இழிநிலையை தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts