எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

எஸ்.சபேசன்

தற்போது நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்களுக்கு எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் (எஸ்டா )   அமைப்பின்  ஏற்பாட்டில் வசதிகுறைந்த கோடை மேடு ,எரிவில் பகுதி பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இவ் அமைப்பானது எருவில் மண்ணின் மைந்தர் சமூகசேவகர் அ.வசிகரன் அவர்களது சிந்தணையில் உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துள்ளவேளையில் பல்வேறு உதவிகளைச்செய்துவருகின்றமை  பாராட்டத்தக்கது.

இவ் அமைப்பின் சேவையினை உணர்ந்த பல நலன் விரும்பிகளால் இவ் அமைப்பின் ஊடாக பல உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .இதன் ஒரு அங்கமாக அமரர் திருமதி மோகனசுந்தரி நாகராசா அவர்களது ஞாபகார்த்தமாக இவ்  உதவி வழங்கிவைக்கப்பட்டன. இவ் உதவியினை வழங்கிவைப்பதற்காக 50,000 ரூபாவினை அவர்களது பிள்ளைகளான கட்டாரில் வசிக்கும் நா.வசிகரன் மற்றும் நா.சசிகரன் ஆகியோர் வழங்கிவைத்தனர். 

இந்நிகழ்வில் அமைப்பின் ஆலோசகர் ச.பேரின்பநாயகம் (J,P),அமைப்பின் ஆலோசகரும் கோடைமேடு கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவருமான க.விஜயசுந்தரம், அமைப்பின் செயலாளர் ஆசிரியர் ஐ.ஜீவராஜ் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் க.பகீரதன் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இவ் உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

 

Related posts