சுவீஸ் உதயத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு விழா

இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் உள்ளங்களினால் இலங்கையில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்யும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட சுவீஸ் உதயம் அமைப்பு 19 ஆவது வருடத்தில் கால்பதிக்கின்றது

இலங்கை வாழ் உறவுகளுக்கு உதவும் கரங்களுடன்  சுவீஸ் உதயத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு விழா 22.10.2023  ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை  சுவிஸ் நாட்டில்  ;   treffpunkt wittig kofen   jupiterstrasse 15,3015 Bern   எனும் இடத்தில் தலைவர் ரி.சுதர்சன் தலைமையில் மிகவும் சிறப்பாக  இடம்பெறவுள்ளது

சுவிஸ் உதயம் அமைப்பானது 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையின் பின்னர் சுவிஸ் நாட்டிலே வாழும் இலங்கையர்களால் உருவாக்கப்பட்டு அதன் கிளையாக இலங்கையில் கிழக்குமாகாண சுவிஸ் உதயம் அமைப்பு எனும் நாமத்துடன் இனம் மதம் கடந்து பல்வேறு சமூகசேவைகளைச்செய்துவருகின்றன

கல்வி,வாழ்வாதாரம் நோய்யுற்றவர்களின் சிகிச்சைக்கான உதவி பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கான உதவி போன்றவற்றை சுமார் 19 வருடங்களாக  இவ் அமைப்பு செய்துவருகின்றது சுவிஸ் நாட்டில் வாழும் நல்லுள்ளம் கொண்ட சிலரது சிறுதொகைப் பணங்களைச் சேகரித்து இலங்கைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன இவ் அமைப்பின் தலைமை அலுவலகம் மட்டக்களப்பு திராய்மடு பனிச்சையடியில் இயங்கிக்கொண்டு வருகின்றது.

இவ் விழாவானது சுவீஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் செயலாளர் அம்பலவாணர் ராஜன்  பொருளாளர் க.துரைநாயகம் மற்றும் நிருவாகசபை உறுப்பினர்கள் இளையோர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் இன்னும் பலரின் ஆதரவுடன் விழா இடம்பெறவுள்ளது

இளையராகங்கள் அலோசியஸ் அவர்களது மின்னல் கரோக்கி இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது அன்றைய தினம் அதிஷ்டலாபச் சீட்டிடும்  இடம்பெறஇருப்பதுடன் முதலாம்பரிசாக 12 கிராம் தங்கமும் 2 ஆம் பரிசாக 8 கிராம்தங்கமும் 3 ஆம் பரிசாக 4 கிராம் தங்கமும் வழங்கப்பட இருப்பதுடன் இந்நிகழ்வுக்கு அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அமைப்பின் செயலாளர் அம்பலவாணர் ராஜன்வேண்டுகோள்விடுத்துள்ளார்

Related posts